நெய்தல் பணைசூழ் ஒற்றியினார் நிருத்தம் பயில்வார் மால்அயனும் எய்தற் கரியார் மாலையிட்டார் எனக்கென் றுரைக்கும் பெருமைஅல்லால் உய்தற் கடியேன் மனையின்கண் ஒருநா ளேனும் உற்றறியார் கொய்தற் கரிதாங் கொடியேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே