நெய்யி னால்சுடு நெருப்பவிப் பவன்போல் நெடிய துன்பமாம் கொடியவை நிறைந்த பொய்யி னால்பவம் போக்கிட நினைத்தேன் புல்ல னேனுக்குன் நல்அருள் வருமோ கையி னால்தொழும் அன்பர்தம் உள்ளக் கமலம் மேவிய விமலவித் தகனே செய்யி னால்பொலிந் தோங்கிநல் வளங்கள் திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே