நெறிகொண்ட நின்னடித் தாமரைக் காட்பட்டு நின்றஎன்னைக் குறிகொண்ட வாழ்க்கைத் துயராம் பெரிய கொடுங்கலிப்பேய் முறிகொண் டலைக்க வழக்கோ வளர்த்த முடக்கிழநாய் வெறிகொண்ட தேனும் விடத்துணி யார்இவ் வியனிலத்தே