நேரா அழுக்குத் துணியாகில் உன்றனை நேரில்கண்டும் பாரா தவர்என நிற்பார் உடுத்தது பட்டெனிலோ வாரா திருப்பதென் வாரும்என் பார்இந்த வஞ்சகர்பால் சேராது நன்னெஞ்ச மேஒற்றி யூரனைச் சேர்விரைந்தே