நேரிழை யவர்தம் புணர்முலை நெருக்கில் நெருக்கிய மனத்தினேன் வீணில் போரிழை வெறியர் புகழ்பெறு வெறியேன் புனைகலை இலர்க்கொரு கலையில் ஓரிழை எனினும் கொடுத்திலேன் நீள உடுத்துடுத் தூர்தொறுந் திரிந்தேன் ஏரிழை விழைந்து பூண்டுளங் களித்தேன் என்னினும் காத்தருள்எனையே