நோயை அறுக்கும் பெருமருந்தை நோக்கற் கரிய நுண்மைதனைத் தூய விடைமேல் வரும்நமது சொந்தத் துணையைத் தோற்றுவிக்கும் ஆய வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய் சேய அயன்மால் நாடரிதாம் சிவயா நமஎன் றிடுநீறே