பங்கே ருகப்பூம் பணையொற்றிப் பதியீர் நடுவம் பரமென்னு மங்கே யாட்டுக் காலெடுத்தீ ரழகென் றேனவ் வம்பரமே லிங்கே யாட்டுத் தோலெடுத்தா யாமொன் றிரண்டு நீயென்றா லெங்கே நின்சொல் லென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ