பசுநிறத்த ஐங்கருவில் பகர்ந்தசுவைத் தன்மை பற்பலகோ டிகளாம்அவ் வுற்பவசத் திகளில் வசுநிறத்த விவிதநவ சத்திபல கோடி வயங்கும்அவைக் குள்ஆதி வயங்குவள்அவ் வாதி தசநிறத்த வாகஅதில் தனித்தனிஓங் காரி சார்ந்திடுவள் அவள்அகத்தே தனிப்பரைசார்ந் திடுவள் திசைநிறத்தப் பரைநடுவில் திருநடனம் புரியும் திருவடியின் பெருவடியைச் செப்புவதார் தோழி