பசைஇலாக் கருங்கல் பாறைநேர் மனத்துப் பதகனேன் படிற்றுரு வகனேன் வசைஇலார்க் கருளும் மாணிக்க மணியே வள்ளலே நினைத்தொழல் மறந்து நசைஇலா மலம்உண் டோ டுறும் கொடிய நாய்என உணவுகொண் டுற்றேன் தசைஎலாம் நடுங்க ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே