பசையறு வஞ்சகர் பாற்சென் றேங்கியே வசைபெற நாள்தொறும் வருந்து நெஞ்சமே இசைசிவ சண்ம என்று நீறிடில் திசைபெற மதிப்பர்உன் சிறுமை நீங்குமே திருச்சிற்றம்பலம் தேவ ஆசிரியம் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்