படமாட்டேன் துயர்சிறிதும் படமாட்டேன் இனிநான் பயப்படவும் மாட்டேன்நும் பதத்துணையே பிடித்தேன் விடமாட்டேன் ஏமாந்து விடமாட்டேன் கண்டீர் மெய்ம்மைஇது நும்மாணை விளம்பினன்நும் அடியேன் கெடமாட்டேன் பிறர்மொழிகள் கேட்டிடவும் மாட்டேன் கிளர்ஒளிஅம் பலத்தாடல் வளர்ஒளிநும் அல்லால் நடமாட்டேன் என்உளத்தே நான்சாக மாட்டேன் நல்லதிரு வருளாலே நான்தான்ஆ னேனே