படமுடியா தினித்துயரம் படமுடியா தரசே பட்டதெல்லாம் போதும்இந்தப் பயந்தீர்த்திப் பொழுதென் உடல்உயிரா தியஎல்லாம் நீஎடுத்துத் கொண்டுன் உடல்உயிரா தியஎல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய் வடலுறுசிற் றம்பலத்தே வாழ்வாய்என் கண்ணுள் மணியேஎன் குருமணியே மாணிக்க மணியே நடனசிகா மணியேஎன் நவமணியே ஞான நன்மணியே பொன்மணியே நடராஜ மணியே