படிசெய்பிர மன்முதலோர் பற்பலநாள் வருந்திப் பன்மணிகள் ஒளிவிளங்கப் பதித்தசிங்கா தனத்தே அடிசெய்தெழுந் தருளிஎமை ஆண்டருளல் வேண்டும் அரசேஎன் றவரவரும் ஆங்காங்கே வருந்த வடிசெய்மறை முடிநடுவே மன்றகத்தே நடிக்கும் மலரடிகள் சிவப்பஒரு வளமும்இலா அசுத்தக் குடிசைநுழைந் தனையேஎன் றேசுவரே அன்பர் கூசாமல் என்னுளமாம் குடிசைநுழைந் தனையே