படித்தஎன் படிப்பும் கேள்வியும் இவற்றின் பயனதாம் உணர்ச்சியும் அடியேன் பிடித்தநல் நிலையும் உயிரும்மெய் இன்பும் பெருமையும் சிறப்பும்நான் உண்ணும் வடித்ததெள் ளமுதும் வயங்குமெய் வாழ்வும் வாழ்க்கைநன் முதலும்மன் றகத்தே நடித்தபொன் னடியும் திருச்சிற்றம் பலத்தே நண்ணிய பொருளும்என் றறிந்தேன்