படித்தேன்பொய் உலகியனூல் எந்தாய் நீயே படிப்பித்தாய் அன்றியும்அப் படிப்பில் இச்சை ஒடித்தேன்நான் ஒடித்தேனோ ஒடிப்பித் தாய்பின் உன்னடியே துணையெனநான் உறுதி யாகப் பிடித்தேன்மற் றதுவும்நீ பிடிப்பித் தாய்இப் பேதையேன் நின்னருளைப் பெற்றோர் போல நடித்தேன்எம் பெருமான்ஈ தொன்றும் நானே நடித்தேனோ அல்லதுநீ நடிப்பித் தாயோ