படிமேல் அடியேன் உனைஅன் றிஓர்பற்றி லேன்என் முடிமேல் அடிவைத் தருள்செய் திடமுன்னு கண்டாய் கொடிமேல் விடைநாட் டியஎண்கு ணக்குன் றமே பொடிமேல் விளங்குந் திருமே னிஎம்புண் ணியனே
படிமேல் ஆசை பலவைத்துப் பணியும் அவர்க்கும் பரிந்துசுகக் கொடிமேல் உறச்செய் தருள்கின்றாய் என்பால் இரக்கங் கொண்டிலையே பொடிமேல் அணிநின் அருட்கிதுதான் அழகோ பொதுவில் நடிக்கும்உன்றன் அடிமேல் ஆசை அல்லால்வே றாசை ஐயோ அறியேனே