படியின் மாக்களை வீழ்த்தும் படுகுழி பாவம் யாவும் பழகுறும் பாழ்ங்குழி குடிகொள் நாற்றக் குழிசிறு நீர்தரும் கொடிய ஊற்றுக் குழிபுழுக் கொள்குழி கடிம லக்குழி ஆகும் கருக்குழிக் கள்ள மாதரைக் கண்டும யங்கினேன் ஒடிவில் சீர்த்தணி காசல நின்புகழ் ஓதி லேன்எனக் குண்டுகொல் உண்மையே