படியே அளந்த மாலவனும் பழைய மறைசொற் பண்ணவனும் முடியீ றறியா முதற்பொருளே மொழியும் ஒற்றி நகர்க்கிறையே அடியார் களுக்கே இரங்கிமுனம் அடுத்த சுரநோய் தடுத்ததுபோல் படிமீ தடியேற் குறுபிணிபோம் படிநீ கடைக்கண் பார்த்தருளே எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்