படுவேன் அல்லேன் நமன்தமரால் பரிவேன் அல்லேன் பரமநினை விடுவேன் அல்லேன் என்னையும்நீ விடுவாய் அல்லை இனிச்சிறிதும் கெடுவேன் அல்லேன் சிறியார்சொல் கேட்பேன் அல்லேன் தருமநெறி அடுவேன் அல்லேன் திருஒற்றி அப்பா உன்றன் அருள்உண்டே