படைத்தபடைப் பொன்றதிலே பரம்அதிற்கா ரணமாம் பகுதிஅதில் பகுக்கின்ற பணிகள்பல பலவாம் புடைத்தஅவை புகுந்துலவும் புரம்ஒன்றப் புரத்தில் பூபதிஒன் றவர்க்குணர்த்தும் பூரணசித் தொன்று மிடைத்தஇவை எல்லாஞ்சிற் றம்பலத்தே நடிக்கும் மென்பதத்தோர் சிற்றிடத்து விளங்கிநிலை பெறவே அடைத்துமற்றிங் கிவைக்கெல்லாம் அப்புறத்தே நிற்பார் அவர்பெருமை எவர்அறிவார் அறியாய்நீ தோழி