படைப்பவனுங் காப்பவனும் பற்பலநாள் முயன்று பார்க்கவிரும் பினுங்கிடையாப் பாதமலர் வருந்த நடைப்புலையேன் பொருட்டாக நடந்திரவிற் கதவம் நன்குதிறப் பித்தொன்று நல்கியதும் அன்றி இடைப்படுநா ளினும்வந்தென் இதயமயக் கெல்லாம் இரிந்திடச்செய் தனைஉன்றன் இன்னருள்என் என்பேன் தடைப்படுமா றில்லாத பேரின்பப் பெருக்கே தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே