பணிகொள் மார்பினர் பாகன மொழியான் பாகர் காலனைப் பாற்றிய பதத்தார் திணிகொள் வன்மத மலைஉரி போர்த்தோர் தேவர் நாயகர் திங்களம் சடையார் அணிகொள் ஒற்றியரூஙதஇர் அமர்ந்திடும் தியாகர் அழகர் அங்கவர் அமைந்துவீற் றிருக்கும் மணிகொள் கோயிற்குத் திருப்பணி செய்தும் வாழ்க நீஉடன் வருதிஎன் மனனே திருச்சிற்றம்பலம் நிதன ன உருகுகின்ற சமுக பற்றின் திறம் பகர்தல் திருவொற்றியூர் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்