பணிந்தறியேன் அன்புடனே பாடுதலும் அறியேன் படித்தறியேன் கேட்டறியேன் பத்தியில்பூ மாலை அணிந்தறியேன் மனம்உருகக் கண்களின்நீர் பெருக அழுதறியேன் தொழுதறியேன் அகங்காரம் சிறிதும் தணிந்தறியேன் தயவறியேன் சத்தியவா சகமும் தான்அறியேன் உழுந்தடித்த தடியதுபோல் இருந்தேன் துணிந்தெனக்கும் கருணைசெய்த துரையேஎன் உளத்தே சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே