பணிந்துபணிந் தணிந்தணிந்து பாடுமினோ உலகீர் பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே துணிந்துவந்த வேதாந்த சுத்தஅனு பவமே துரியமுடி அனுபவமே சுத்தசித்தாந் தமதாய்த் தணிந்தநிலைப் பெருஞ்சுகமே சமரசசன் மார்க்க சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே என்று கணிந்துளத்தே கனிந்துநினைந் துரைத்திடில்அப் பொழுதே காணாத காட்சிஎலாம் கண்டுகொளல் ஆமே