பண்ஏறும் மொழிஅடியர் பரவி வாழ்த்தும் பாதமலர் அழகினைஇப் பாவி பார்க்கில் கண்ஏறு படும்என்றோ கனவி லேனும் காட்டென்றால் காட்டுகிலாய் கருணை ஈதோ விண்ஏறும் அரிமுதலோர்க் கரிய ஞான விளக்கேஎன் கண்ணேமெய் வீட்டின் வித்தே தண்ஏறு பொழிதணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே