பண்டு மகிழ்ந்தெனையாட் கொண்டு கருணைசெய்த பரமே - பரமே - பரமேயென் றலறவும் இன்னந்
பண்டு நின்திருப் பாதம லரையே பாடி யாடிய பத்திமை யோரைப்போல் தொண்டு கொண்டெனை ஆண்டனை இன்றுதான் துட்டன் என்றுது ரத்திடல் நன்றுகொல் குண்டு நீர்க்கடல் சூழுல கத்துளோர் குற்றம் ஆயிரங் கோடிசெய் தாலும்முன் கொண்டு பின்குலம் பேசுவ ரோஎனைக் குறிக்கொள் வாய்எண் குணந்திகழ் வள்ளலே எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்