பண்டுகொண் டெனைத்தான் பிழைகுறி யாத பண்பனே திருச்சிற்றம் பலத்தே தொண்டுகொண் டடியர் களிக்கநின் றாடும் தூயனே நேயனே பிரமன் விண்டுகண் டறியா முடிஅடி எனக்கே விளங்குறக் காட்டிய விமலா கண்டுகொண் டுறுதற் கிதுதகு தருணம் கலந்தருள் கலந்தருள் எனையே