பண்ணவ னேநின் பதமலர் ஏத்தும் பயன்உடையோர் கண்ணவ னேதணி காசல னேஅயில் கையவனே விண்ணவர் ஏத்திய மேலவ னேமயல் மேவுமனம் புண்ணவ னேனையும் சேர்ந்தாய்என் னேஉன்றன் பொன்அருளே
பண்ணவ னேபசு பாசத்தை நீக்கும் பரம்பரனே மண்ணவ னேனை மகிழ்ந்தவ னேமலம் மாற்றுகின்ற விண்ணவ னேவெள் விடையவ னேவெற்றி மேவுநெற்றிக் கண்ணவ னேஎனைக் காத்தவ னேஒற்றிக் காவலனே