பண்ணால்உன் அருட்புகழைப் பாடு கின்றார் பணிகின்றார் நின்அழகைப் பார்த்துப் பார்த்துக் கண்ணார உளங்குளிரக் களித்தா னந்தக் கண்ணீர்கொண் டாடுகின்றார் கருணை வாழ்வை எண்ணாநின் றுனைஎந்தாய் எந்தாய் எந்தாய் என்கின்றார் நின்அன்பர் எல்லாம் என்றன் அண்ணாநான் ஒருபாவி வஞ்ச நெஞ்சத்தால் அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ