பண்ணினுள் இசையே பாலினுள் சுவையே பத்தர்கட் கருள்செயும் பரமே மண்ணினுள் ஓங்கி வளம்பெறும் முல்லை வாயில்வாழ் மாசிலா மணியே பெண்ணினும் பேதை மதியினேன் எனினும் பெருமநின் அருள்பெற லாம்என் றெண்ணிவந் தடைந்தால் கேள்வியில் லாமல் இருப்பதுன் திருவருட் கியல்போ