பண்ணிய தவமும் பலமும்மெய்ப் பலஞ்செய் பதியுமாம் ஒருபசு பதியை நண்ணிஎன் உளத்தைத் தன்னுளம் ஆக்கி நல்கிய கருணைநா யகனை எண்ணிய படியே எனக்கருள் புரிந்த இறைவனை மறைமுடி இலங்கும் தண்ணிய விளக்கைத் தன்னிக ரில்லாத் தந்தையைக் கண்டுகொண் டேனே
பண்ணிய பூசை நிறைந்தது சிற்றம் பலநடங்கண் டெண்ணிய எண்ணம் பலித்தன மெய்இன்பம் எய்தியதோர் தண்ணியல் ஆரமு துண்டனன் கண்டனன் சாமியைநான் நண்ணிய புண்ணியம் என்னுரைக் கேன்இந்த நானிலத்தே