பண்ணேன்நின் புகழ்சொல்வோர் தமக்குப் பூசை பாடேன்நின் திருச்சீரைப் பரமன் ஈன்ற கண்ணேநின் தணிகைதனைக் கண்டு போற்றேன் கைகுவியேன் மெய்குளிரேன் கண்ணீர் பாயேன் உண்ணேன்நல் ஆனந்த அமுதை அன்பர் உடன்ஆகேன் ஏகாந்தத் துறஓர் எண்ணம் எண்ணேன்வன் துயர்மண்ணேன் மனஞ்செம் புண்ணேன் ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே திருச்சிற்றம்பலம் பணித்திறஞ் சாலாப் பாடிழிவு எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்