பதங்கூ றொற்றிப் பதியீர்நீர் பசுவி லேறும் பரிசதுதான் விதங்கூ றறத்தின் விதிதானோ விலக்கோ விளம்பல் வேண்டுமென்றே னிதங்கூ றிடுநற் பசுங்கன்றை நீயு மேறி யிடுகின்றா யிதங்கூ றிடுக வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ