பதிஉடையார் கனகசபா பதிஎனும்பேர் உடையார் பணம்பரித்த வரையர்என்னை மணம்புரிந்த கணவர் விதியுடையார் ஏத்தநின்ற துதிஉடையார் ஞான விளக்கனைய மெய்உடையார் வெய்யவினை அறுத்த மதிஉடையார் தமக்கருளும் வண்கைபெரி துடையார் மங்கைசிவ காமவல்லி மணவாளர் முடிமேல் நதிஉடையார் அவர்பெருமை மறைக்கும்எட்டா தென்றால் நான்உரைக்க மாட்டுவனோ நவிலாய்என் தோழி () பணம்புரிந்த - பி இரா பதிப்பு