பதிசார வைத்துமுற் பசுநிலை காட்டிப் பாசவி மோசனப் பக்குவன் ஆக்கி நிதிசார நான் இந்த நீள்உல கத்தே நினைத்தன நினைத்தன நேருறப் புரிந்து திதிசேர மன்னுயிர்க் கின்பஞ்செய் கின்ற சித்திஎ லாந்தந்து சுத்தக லாந்த அதிகார வீதியில் ஆடச்செய் தீரே அருட்பெருஞ் ஸோதிஎன் ஆண்டவர் நீரே