பதியனே பொதுவில் பரமநா டகஞ்செய் பண்பனே நண்பனே உலகில் ஒதியனேன் பிறர்பால் உரத்தவார்த் தைகளால் ஒருசில வாதங்கள் புரிந்தே மதியிலா மையினால் அகங்கரித் ததன்பின் வள்ளல்உன் அருளினால் அறிந்தே விதியைநான் நொந்து நடுங்கிய தெல்லாம் மெய்யனே நீஅறிந் ததுவே