பதியே எங்கும் நிறைந்தருளும் பரம சுகமே பரஞ்சுடரே கதியே அளிக்கும் தணிகைஅமர் கடம்பா உன்றன் ஆறெழுத்தை உதியேர் மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண் ணீறிட்டால் துதிஏர் நினது பதந்தோஎன்றும் துன்பம் ஒன்றும் தோன்றாதே
பதியே சரணம் பரமே சரணம் பரம்பரமாம் திதியே சரணம் சிவமே சரணம் சிவமுணர்ந்தோர் கதியே சரணம்என் கண்ணே சரணம்முக் கட்கருணா நிதியே சரணம் சரணம்என் பால்மெய்ந் நிலையருளே