பத்தர்தம் உள்ளத் திருக்கோயில் மேவும் பரம்பரையே சுத்தமெய்ஞ் ஞான ஒளிப்பிழம் பேசிற் சுகாநந்தமே நித்தநின் சீர்சொல எற்கருள் வாய்ஒற்றி நின்மலர்உன் மத்தர்தம் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே