பத்தி யஞ்சிறி துற்றிலேன் உன்பால் பத்தி ஒன்றிலேன் பரமநின் கருணை மத்தி யம்பெற வந்துநிற் கின்றேன் வள்ளலே உன்றன் மனக்குறிப் பறியேன் எத்தி அஞ்சலை எனஅரு ளாயேல் ஏழை யேன்உயிர் இழப்பன்உன் ஆணை சத்தி யம்புகன் றேன்வடல் அரசே சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே
பத்தி நெறியில் செழித்தே - அன்பில் பாடுமெய் யன்பர் பதியில் பழுத்தே தித்தித் திருப்பது பாரீர் - திருச் சிற்றம் பலத்தே திருநட ஸோதி ஸோதி