பத்திகொண் டவருள் பரவிய ஒளியாம் பரஞ்சுடர் நின்அடி பணியும் புத்திகொள் ளலர்பால் எளியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் நித்திய அடியர் தம்முடன் கூட்ட நினைந்திடில் உய்குவன் அரசே சத்திசெங் கரத்தில் தரித்திடும் அமுதே தணிகைவாழ் சரவண பவனே