பனம்பழமே எனினும்இந்தப் பசிதவிர்த்தால் போதும் பாரும்எனப் பகர்கின்ற பாவையர்போல் பகராள் இனம்பழமோ கங்கலந்தாள் சிவானுபவத் தல்லால் எந்தஅனு பவங்களிலும் இச்சைஇல்லாள் அவர்தம் மனம்பழமோ காயோஎன் றறிந்துவர விடுத்தாள் மற்றவர்போல் காசுபணத் தாசைவைத்து வருந்தாள் தனம்பழமோ தேவர்திரு வாய்மலர வேண்டும் சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே