பனிஇடர் பயந்தீர்த் தெனக்கமு தளித்த பரமனை என்னுளே பழுத்த கனிஅனை யவனை அருட்பெருஞ் சோதிக் கடவுளைக் கண்ணினுள் மணியைப் புனிதனை எல்லாம் வல்லஓர் ஞானப் பொருள்எனக் களித்தமெய்ப் பொருளைத் தனியனை ஈன்ற தாயைஎன் உரிமைத் தந்தையைக் கண்டுகொண் டேனே -------------------------------------------------------------------------------- உளம் புகுந்த திறம் வியத்தல் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்