பனிப்பறுத் தெல்லாம் வல்லசித் தாக்கிப் பரம்பரம் தருகின்ற தென்றோர் தனிப்பழம் எனக்கே தந்தைதான் தந்தான் தமியனேன் உண்டனன் அதன்தன் இனிப்பைநான் என்என் றியம்புவேன் அந்தோ என்னுயிர் இனித்ததென் கரணம் சனிப்பற இனித்த தத்துவம் எல்லாம் தனித்தனி இனித்தன தழைத்தே