பனிப்புற அருளும் முக்கட் பரஞ்சுடர் ஒளியே போற்றி இனிப்புறு கருணை வான்தேன் எனக்கருள் புரிந்தாய் போற்றி துனிப்பெரும் பவந்தீர்த் தென்னைச் சுகம்பெற வைத்தோய் போற்றி தனிப்பெருந் தவமே போற்றி சண்முகத் தரசே போற்றி