பன்னரும்வன் துயரால்நெஞ் சழிந்து நாளும் பதைத்துருகி நின்அருட்பால் பருகக் கிட்டா துன்னரும்பொய் வாழ்க்கைஎனும் கானத் திந்த ஊர்நகைக்கப் பாவிமழல் உணர்ந்தி லாயோ என்னருமை அப்பாஎன் ஐயா என்றன் இன்னுயிர்க்குத் தலைவாஇங் கெவர்க்கும் தேவா தன்னியல்சீர் வளர்தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே