பன்னிரண் டாண்டு தொடங்கிநான் இற்றைப் பகல்வரை அடைந்தவை எல்லாம் உன்னிநின் றுரைத்தால் உலப்புறா ததனால் ஒருசில உரைத்தனன் எனினும் என்னுளத் தகத்தும் புறத்தும்உட் புறத்தும் இயல்புறப் புறத்தினும் விளங்கி மன்னிய சோதி யாவும்நீ அறிந்த வண்ணமே வகுப்பதென் நினக்கே