பன்னிருகண் மலர்மலர்ந்த கடலே ஞானப் பரஞ்சுடரே ஆறுமுகம் படைத்த கோவே என்னிருகண் மணினேஎந் தாயே என்னை ஈன்றானே என்அரசே என்றன் வாழ்வே மின்னிருவர் புடைவிளங்க மயில்மீ தேறி விரும்பும்அடி யார்காண மேவுந் தேவே சென்னியில்நின் அடிமலர்வைத் தென்னை முன்னே சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே திருச்சிற்றம்பலம் திருவருட் பேற்று விழைவு அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்