பன்னு வார்க்கு ளும்பர மேட்டியே மன்னும் மாமணி யேவல்லி கேசனே உள்ள நீஇங்கு டுத்திய கந்தையைத் துன்னு வார்இல்லை யோபரஞ் சோதியே
பன்னு மனத்தால் பரிசிழந்த பாதகனேன் துன்னுமல வெங்கதிரோன் சூழ்கின்ற சோடையினால் நின்னருள்நீர் வேட்டு நிலைகலங்கி வாடுகின்றேன் இன்னும்அறி யாயோ எழுத்தறியும் பெருமானே