பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர் பவநெறி இதுவரை பரவிய திதனால் செந்நெறி அறிந்திலர் இறந்திறந் துலகோர் செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான் புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத் தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே தனிநட ராசஎன் சற்குரு மணியே சென்னெறி - முதற்பதிப்பு, பொ,சு, பி இரா, ச மு க