பயமும்வன் கவலை இடர்முதல் அனைத்தும் பற்றறத் தவிர்த்தருட் பரிசும் நயமும்நற் றிருவும் உருவும்ஈங் கெனக்கு நல்கிய நண்பைநன் னாத இயமுற வெனது குளநடு நடஞ்செய் எந்தையை என்னுயிர்க் குயிரைப் புயனடு விளங்கும் புண்ணிய ஒளியைப் பொற்புறக் கண்டுகொண் டேனே